உலகளவில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட விளையாட்டுகளில் கால்பந்து முதலிடம் பெற்று வருகிறது. அதிகளவிலான பொருட்செலவு கொண்டு நடத்தப்படும் இந்த கால்பந்து தொடர்களை ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற, புகழ்பெற்ற பல நிறுவனங்களிடையே போட்டிகள் நிலவும். அதன்படி, அடுத்த வருடம் ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் fifa 2018 உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற இந்த வருடமும் கடும் போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் புதிய ஒளிபரப்பு நிறுவனமான கிவிஸ் (Kwesé TV) என்ற நிறுவனம் ஒளிபரப்பு உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், அதற்குள் இந்தப் பெரிய அளவிலான ஒளிபரப்பு உரிமத்தைப் பெற்றது ஆச்சர்யம்தான். Kwesé என்ற சொல் ஷோன (shona) என்ற மொழியிலிருந்து பெறப்பட்டது. ஆங்கிலத்தில் everywhere என்பதே இதன் பொருள். தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இந்த சிறிய நிறுவனம், இதற்குமுன்னர் அவர்களின் நாட்டுக்குள் நடக்கும் விளையாட்டுகள், நிகழ்வுகள், போன்றவற்றை ஒளிபரப்பி வந்தது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின்படி, இந்த புதிய நிறுவனம் **FIFA U-20 World Cup 2017, FIFA U-17 World Cup 2017, FIFA Beach Soccer World Cup 2017, FIFA U-17 Women’s World Cup 2018 மற்றும் FIFA U-20 Women’s World Cup 2018** என்ற பல்வேறு போட்டிகளை ஒளிபரப்பும் உரிமத்தைப் பெற்றுள்ளது. இதுவரை தென் ஆப்பிரிக்காவில் மட்டும் இவர்களது ஒளிபரப்பு நடைபெற்றுவந்தநிலையில், தற்போது உலகின் பல்வேறு இடங்களில் ஒளிபரப்பும் உரிமத்தை இவர்கள் பெற்றுள்ளனர். இந்த நிறுவனத்தின் ஒளிபரப்பைக் காண **Kwesé Free Sports, Kwesé Sports 1 & 2** என்ற சேனல்கள் **KweséSports.com** என்ற வலைதளம் அல்லது **the Kwesé App** என்ற மொபைல் ஆப்களை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளனர். புதிய ஒளிபரப்பு நிறுவனம் என்பதால் குறைந்த விலையில் அனைத்து மக்களும் தெளிவான ஒளிபரப்பைக் காண முடியும் என தகவல் தெரிவித்துள்ளனர்.