இப்போது வெள்ளத்துரை… அடுத்து முருகன்? கடைசி நேர சஸ்பெண்ட் லிஸ்ட்!

Published On:

| By Kavi

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று வர்ணிக்கப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று மே 31 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், பாலியல் வழக்கில் சிக்கிய ஏடிஜிபி முருகன் மீது எப்போது நடவடிக்கை பாயும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் எடுத்த ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று மே 31 ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில்,  நேற்றைய தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

2013 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டத்தில் வெள்ளத்துரை பணி செய்தபோது, போலீஸ் காவலில் நடந்த மரணம் குறித்த விசாரணையின் முடிவில் உள்துறை செயலாளர் அமுதா நடவடிக்கை எடுத்துள்ளார்.

Image

வெள்ளத்துரையை விட பெரும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் எஸ்டிஎஃப் பிரிவில் ஏடிஜிபியாக பணியாற்றி வரும் முருகன். சிபிஐ யில் பணியாற்றியபோது பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி விசாரணைக்கு ஆளானவர்.

கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குநராக முருகன் இருந்தபோது, அவருக்குக் கீழ் பணி செய்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட அந்த பெண் எஸ்பி முதலில் தற்கொலைக்கு முயன்றார், அப்போது அவரது குடும்பத்தினர் காப்பாற்றி, ஆறுதல் சொல்லி முருகன் மீது தைரியமாக புகார் கொடுக்க வைத்தனர்.

அப்போது  முருகன் பவர் ஃபுல்லாக  இருந்ததால் தப்பித்து வந்தார்.

அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாகக் கண்டனத்தைத் தெரிவித்தார், இப்போது அவர் முதல்வராக இருக்கிறார், அவரது துறையான காவல்துறையில் சிறப்பு அதிரடி படையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வருகிறார் முருகன். அவர் மீதான பாலியல் வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏடிஜிபி முருகனின் பதவி காலம் காலம் அடுத்த மாதம் ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்தசூழலில் ஓய்வு பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்னதாக வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது போல் ஏடிஜிபி முருகன் அடுத்த மாதம் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

சென்னையில் தாய்பால் விற்பனை: கடைக்கு சீல்!

பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் மீண்டும் தீ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share