தொடர்ந்து மௌனம் காக்கும் எடப்பாடி

Published On:

| By Prakash

”யாரையும் விமர்சித்து பேசவேண்டாம். மௌனமாக இருந்து, நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாகச் சொல்கிறார்கள் அதிமுக முக்கிய நிர்வாகிகள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சி, எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என நான்கு பேர் தலைமையில் நான்கு அணியாக பிரிந்துள்ளது.

பிரிந்துள்ள அனைவரையும் ஒன்று சேர்த்து 2024 இல் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக தலைமை முயற்சி செய்து வருகிறது, ஆனால் எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காமல் இருந்து வருகிறார்.

சமீபத்தில் எடப்பாடியைச் சந்தித்த பாஜக பிரதிநிதி ஒருவர் தமிழக அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவரமாக பேசியிருக்கிறார்.

அப்போது, “குறிப்பாக திமுக ஆட்சி மீது மக்கள் கடுமையான அதிருப்தியிலும் கோபத்திலும் இருக்கிறார்கள்.

இந்த தருணத்தில் ஒன்றாக இணைந்து 2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தால் பெரும் வெற்றி கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, ”இன்னும் நாட்கள் இருக்கிறது பார்ப்போம்” என்று கூறியுள்ளார்.

பாஜக பிரதிநிதி எடப்பாடி பழனிசாமி இருவர் சந்திப்புக்கு பிறகு தன்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளிடம், “யாரையும் விமர்சித்து பேசவேண்டாம். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி வருகிறாராம்.

இதுகுறித்து நம்முடைய மின்னம்பலத்தில் கடந்த அக்டோபர் 23ம் தேதி, ‘இரண்டு அறிக்கை: பம்முவது ஏன்? எடப்பாடி சொன்ன சீக்ரெட்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போதும் அதே கருத்தைத்தான் எடப்பாடி பழனிசாமி முக்கிய நிர்வாகிகளிடம் நினைவூட்டி இருக்கிறார்.

சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு அவரை சந்திப்பதற்காக, வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் சென்றுள்ளனர்.

அப்போது பன்னீர் மற்றும் சசிகலா செய்யும் அரசியல் பற்றி பேசியபோது, குறுக்கிட்ட எடப்பாடி பழனிசாமி ”யாரைப் பற்றியும் விமர்சித்து பேசவேண்டாம். மௌனமாக இருந்து நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்;

மற்றதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறி அனுப்பியுள்ளார்.
வணங்காமுடி

இனி வருடம் முழுதும் குற்றால அருவி கொட்டும்: இதோ புதிய திட்டம்!

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் கட்டாயம்: தமிழக அரசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share