அதிமுக உட்கட்சி மோதலில் திடீர் திருப்பம்! எடப்பாடியை நேரில் சந்தித்தார் எஸ்பி வேலுமணி.. பின்னணி என்ன?

By Pandeeswari Gurusamy

|

Published on 27 May 2026, 12:40 PM

AIADMK MLAs Arrives in Two Factions at Assembly

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பினர் செயல்படத் தொடங்கினர்.

கடந்த மே 13-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிமுக தலைமை தனது எம்எல்ஏக்களுக்குக் கொறடா உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், கட்சியின் தலைமைப் பேச்சையும் மீறி, சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி ஆதரவு தரப்பைச் சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் முதலமைச்சர் விஜய் தலைமயிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ADVERTISEMENT

இந்த அரசியல் பரபரப்புக்கு மத்தியில், எஸ்பி வேலுமணியின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த 4 எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். எம்எல்ஏக்களின் இந்த திடீர் ராஜினாமா மற்றும் கட்சித் தாவல் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் பேசும் வகையில் ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், எஸ்பி வேலுமணி, இன்று பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்றுள்ளார்.

ADVERTISEMENT

அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி – எஸ்பி வேலுமணி இடையே நடைபெறும் இந்தச் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை இதுவரை சிவி சண்முகம் சந்திக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel