அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 13ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சி இன்று (ஜூன் 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் வரும் ஜூன் 13ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடி தான் என்ற தீர்மானம் செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் அக்கட்சி அடுத்தடுத்து தீவிர முன்னெடுப்பை எடுத்து வருகிறது.
இந்நிலையில் வரும் 13ம் தேதி நடைபெறும் கூட்டத்தில், ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற இருக்கும் கட்சி மாநாடு, நாடாளுமன்ற தேர்தல், புதிய உறுப்பினர்களின் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் திருமண ஆண்டு: குழந்தைகளின் முகம் காட்டிய நயன்தாரா… உருகிய விக்னேஷ் சிவன்
