யாராக இருந்தாலும் திருந்துங்க.. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க – செல்லூர் ராஜு ஓபன் டாக்

By Pandeeswari Gurusamy

|

Published on 2 Jun 2026, 2:17 PM

sellur raju warning to thiruma seeman

அதிமுக தலைவர்கள் அனைவரும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் அதிமுக கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. அதில் 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். மேலும் தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு உள்ளிட்ட காரணங்களால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே மகேந்திரன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகேந்திரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த நிர்வாகியின் குடும்பத்தினருக்கு கட்சித் தலைமை சார்பில் 30 லட்சம் ரூபாயும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சம் ரூபாயும் என மொத்தம் 55 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், தொண்டர்கள் யாரும் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ADVERTISEMENT

இதற்கிடையில், தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகி மகேந்திரனுக்கு, மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினர் இன்று மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜு, “அதிமுக தற்போது பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளது. இந்த பாதிப்புக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும், அதை உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். தலைவர்கள் அனைவரும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தாய் உள்ளத்தோடு கட்சியை வழிநடத்தியது போல, தற்போதைய தலைவர்களும் நடந்து கொள்ள வேண்டும். எந்த நோக்கத்திற்காக எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel