அண்ணாமலையின் அடுத்த நகர்வு என்ன?  ரங்கராஜன் குமாரமங்கலத்தை இப்போது ஞாபகப்படுத்துவது ஏன்?

Published On:

| By Aara

அதிமுக கூட்டணிக்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அப்பதவியில் இருந்து பாஜக மேலிடம் மாற்றுமா, அப்படி மாற்றினால் அண்ணாமலையின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்ற கேள்விகள் தமிழ்நாடு பாஜகவில் இருந்து டெல்லி வரை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி மதுரை வரும் நிலையில், அவரது பயணத்துக்குப் பின்னர் சுமார் 14 மாநில பாஜக தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று தெரிகிறது. அதில் அண்ணாமலையும்  ஒருவராக இருப்பார் என்றும், ஆனால் அண்ணாமலையை பாஜக மேலிடம் அப்படியே விட்டுவிடாது என்றும் டெல்லி வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

மார்ச் 25  ஆம் தேதி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.  அதன்பின் மார்ச் 28 ஆம் தேதி அமித் ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தார். ADMK-BJP alliance Annamalai what next

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, ‘என்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. பாஜகவின் தொண்டனாக இருந்து கூட உழைப்பேன்’ என்று அண்ணாமலை அழுத்தி சொல்லி வரும் நிலையில்தான் மேற்கண்ட கேள்விகள் தீவிரம் அடைந்துள்ளன. அதேநேரம் அண்ணாமலையை மாற்றக் கூடாது என சமூக தளங்களில் மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் இதில் கவனிக்கத் தக்க விஷயம், அண்ணாமலை  ஆதரவு வட்டத்தில் முக்கியமானவர்களாக கருதப்பட்ட பல பாஜக நிர்வாகிகள் இவ்விஷயத்தில்  அண்ணாமலைக்கு பகிரங்க ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் மௌனம் காக்கின்றனர். ஒருவேளை அண்ணாமலை மாற்றப்பட்டால், அடுத்து நியமிக்கப்பட இருக்கும் மாநிலத் தலைவரோடும் அருகே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் மௌனம் காக்கின்றனர்.

இந்நிலையில் அண்ணாமலை என்ன ஆவார் என்று  ‘சி வோட்டர்’ அமைப்பின் நிறுவனரும், பெங்களூருவைச் சேர்ந்த அரசியல் விமர்சகருமான யஷ்வந்த் தேஷ்முக், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இன்று (ஏப்ரல் 2) சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

”அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காக பாஜக மேலிடம் அண்ணாமலையை  மாற்றலாமே தவிர டிப்ரமோட் செய்யாது. தமிழ்நாட்டில் அவர்தான் பாஜகவின் நவீன முகம்.  தென்னிந்தியாவில் அவரைத் தவிர வேறு எந்த பாஜக இளம்  தலைவரும் பிரபலமானவராக இல்லை. ADMK-BJP alliance Annamalai what next

ஆகஸ்ட் 2000 இல் அப்போதைய மத்திய அமைச்சர் பி. ரங்கராஜன் குமாரமங்கலம் 48 வயதில் துரதிர்ஷ்டவசமாக நோய்வாய்ப்பட்டு இறந்தார்.  அவர் மட்டும் இருந்திருந்தால்  பாஜக 25 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றிருக்கும். அவருக்குப் பின் பாஜகவுக்கு கிடைத்த ஒரு இளைய தலைவராக அண்ணாமலையை டெல்லியில் பலர் பார்க்கின்றனர். அதனால் அவரது கேரியர் பாஜகவில் இன்னும் பல ஆண்டுகள் முக்கியத்துவம் பெறும்.  

எனவே தமிழ்நாட்டு பாஜகவின் மாநில தலைவர் பதவியில் இருந்து  அவர் மாற்றப்பட்டாலும்…. அவருக்கு ராஜ்யசபா எம்பி அளித்து மத்திய அமைச்சராக பதவி உயர்வு அளிப்பார்கள். இதன் மூலம் அதிமுகவுடன் இணக்கமாக பழகக்கூடிய ஒருவரை இங்கே மாநிலத் தலைவராக நியமிக்கலாம்” என்று தேஷ்முக் கூறினார். ADMK-BJP alliance Annamalai what next

தேஷ்முக் இப்படி கூறினாலும்… அண்ணாமலையோ தான் மாநில அரசியலிலேயே தொடர்ந்து ஈடுபட விரும்புவதாகவும், டெல்லி அரசியலைவிட லோக்கல் அரசியலிலேயே தன்னால் சாதிக்க முடியும் என்றும் தலைமையிடம் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share