மாதவன் தனது அடுத்த தமிழ்ப் படமான ‘அதிர்ஷ்டசாலி’யின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ளார்.
தமிழில் நடிகர் மாதவன் முன்னணி கதாபாத்திரமாக நடித்து வெளியான திரைப்படம் ‘ராக்கெட்ரி’. இந்த படம் 2022-ஆம் ஆண்டு வெளியானது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தை மாதவனே இயக்கியிருந்தார்.
இந்த நிலையில் தான் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த தமிழ்ப் படமான ‘அதிர்ஷ்டசாலி’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.
அந்த போஸ்டரில் இரண்டு வேடங்களில் மாதவன் காணப்படுகிறார். ஒரு கதாபாத்திரத்தில் கோட்-சூட், கருப்பு கண்ணாடி அணிந்து மிகவும் ஸ்டைலாக காட்சியளிக்கிறார்.மற்றொரு கதாபாத்திரத்தில் குல்லா அணிந்தபடி காட்சியளிக்கிறார்.
மித்திரன் ஜவஹர் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சாய் தன்சிகா, மடோன்னா செபாஸ்டியன், ராதிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார், ‘மாறா’, ‘குதிரைவால்’ போன்ற படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கார்த்திக் முத்துக்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு… வானிலை மையம் அறிவிப்பு!
அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? – எடப்பாடி சொன்ன விளக்கம்!