சிறுவன் கடத்தல்… ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்!

Published On:

| By Kavi

சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

ADVERTISEMENT

அதன்படி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று இரவு விடிய விடிய ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் டிஎஸ்பி தமிழரசி விசாரணை மேற்கொண்டார்.

ADVERTISEMENT

இதற்கிடையே டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் தீரஜ் குமார், முதல்வர் அலுவலகத்திடம் ஆலோசனை செய்து விட்டு ஏடிஜிபி ஜெயராம் ஐபிஎஸ்ஸை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து மின்னம்பலத்தில் ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட்? என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.

ADVERTISEMENT

இந்த சூழலில் இன்று காலை காவல்துறை தலைமை ஏடிஜிபி ஜெயராமை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைத்ததாக தகவல்கள் வந்தன.

அதன்படி ஏடிஜிபி ஜெயராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அதன் அடிப்படையில் உள்துறை செயலாளர் ஜெயராமை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share