விசாரணை முடிந்து கிளம்பிய ஏடிஜிபி ஜெயராம்

Published On:

| By Kavi

ADGP Jayaram leaves after investigation

திருவாலங்காடு காவல் நிலையத்தில் இருந்து ஏடிஜிபி ஜெயராம் புறப்பட்டுச் சென்றுள்ளார். ADGP Jayaram leaves after investigation

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள 16 வயது சிறுவனை கடத்திய வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் திருவாலங்காடு காவல்நிலையத்தில் வைத்து திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி, செங்கல்பட்டு டிஎஸ்பி புகழேந்தி ஆகியோர் நேற்றிரவு விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாகவும் , தனது வாகனத்தை கடத்தல் கும்பல் பயன்படுத்தியது தொடர்பாகவும் போலீசாரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார் ஏடிஜிபி ஜெயராம்.

இதுகுறித்து மின்னம்பலத்தில், “கடத்தல் வழக்கில் என்ன தொடர்பு?” : ஏடிஜிபியிடம் துருவி துருவி கேள்வி கேட்ட பெண் டிஎஸ்பி!” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்தசூழலில் காவல் துறையின் விசாரணை முடிவடைந்து இன்று மாலை ஜெயராம் அவரது காரில் திருவாலங்காடு காவல்நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்ததாக விசாரணைக்கு அழைத்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டு போலீசார் அனுப்பியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ADGP Jayaram leaves after investigation

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share