ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Published On:

| By Selvam

additional police protection for ramadoss house

பாமக நிறுவனர் ராமதாஸ், செயல் தலைவர் அன்புமணி இடையேயான மோதல்போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு இன்று (மே 30) கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று (மே 29) தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், “அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியது நான் செய்த தவறு. அவருக்கு தலைமை பண்பு இல்லை. கட்சி வளர்ச்சி பணிகளுக்கு அன்புமணி தடையாக இருக்கிறார்” என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். additional police protection for ramadoss house

ADVERTISEMENT

இந்தநிலையில், ராமதாஸ் வீட்டிற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது கூடுதலாக 5 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமதாஸின் உயிருக்கு அன்புமணியின் குடும்பத்தால் ஆபத்து உள்ளது என்று மறைந்த வன்னியர் சங்கத்தின் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் உறவினரான வி.ஜி.கே.மணிகண்டன் நேற்று (மே 29) குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. additional police protection for ramadoss house

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share