சென்னையில் இருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்குக் கூடுதல் விமான சேவை தொடங்கியுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.1,260 கோடியில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் பயன்பாட்டுக்கு வந்த பின் வெளிநாடுகளின் விமான சேவைகளுடன் உள்நாட்டு விமான சேவைகளும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமான சேவைகளும் அதே போல் மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது.
நேற்று (ஜூலை 10) முதல் கூடுதலாக சென்னை – மதுரை இடையே 2 சேவைகளும், மதுரை – சென்னை இடையே 2 சேவைகளும் அதிகரித்துள்ளது.
இதேபோல் சென்னை – கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவுக்கு, சென்னையில் இருந்து இதுவரையில் காலையில் ஒரு விமான சேவை, மாலையில் ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது.
கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.
தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து மதியம் 1:50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்குக் கூடுதலாக ஒரு விமான சேவையும், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் திரும்பி வருகிறது.
இதனால் சென்னை – கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூலை 10) முதல் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களின் அனைத்து சர்வதேச விமானங்களும், புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையமான டெர்மினல்-2 ல் இருந்து இயங்கத் தொடங்கி உள்ளது.
இதன் மூலம் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், மஸ்கட், சார்ஜா, தோகா, தமாம், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட 12 நாடுகளுக்கு புதிய விமான நிலையத்தில் இருந்து விமான சேவை அதிகரித்து இயக்கப்படுகிறது.
ராஜ்
டிஜிட்டல் திண்ணை: முதல்வர் குடும்பம் அமைச்சர்கள்… டெல்லியின் அடுத்த திட்டம்!