இந்தியாவிலேயே மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலையாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி மூடப்பட்ட நிலையில், குஜராத் மாநிலம் முந்த்ராவில் அதானி என்டர்பிரைசஸ் (Adani Enterprises) நிறுவனத்தின் கீழ் கட்ச் காப்பர் (Kutch Copper) நிறுவனத்தின் மிகப் பெரிய காப்பர் ஆலை அமைக்கப்பட உள்ளது. உலகிலேயே ஒரே இடத்தில் அமையவிருக்கும் மிகப்பெரிய காப்பர் ஆலை இதுவாகத்தான் இருக்கும்.
தொழில்துறைக்கு தேவையான பிரதான உலோகங்களில் ஸ்டீல், அலுமினியம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக காப்பர் மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
வளர்ந்து வரும் பசுமை மின்சக்தி, டெலிகாம், எலெக்ட்ரிக் வாகனம் போன்ற துறைகளுக்கு காப்பர் அதிகளவில் தேவை. ஆனால், இந்தியா அதிகளவில் காப்பர் இறக்குமதி செய்து வருகிறது.
இந்த நிலையில், அதானியின் கட்ச் காப்பர் ஆலை வரும் மார்ச் மாத இறுதிக்குள் முதற்கட்ட உற்பத்தியை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலையின் உற்பத்தி திறன் 2029-ம் நிதியாண்டுக்குள் 10 லட்சம் டன்னாக உயரும் என கூறப்படுகிறது. ஆலையின் மொத்த மதிப்பு சுமார் 1.2 பில்லியன் டாலர். Adani’s largest copper plant
இந்த ஆலை இரண்டு கட்டங்களாக அமைக்கப்படுகிறது. முதற்கட்டத்தின் உற்பத்தி திறன் ஆண்டுக்கு 5 லட்சம் டன். இது மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது.
அடுத்து இரண்டாம்கட்டத்தில் மற்றொரு 5 லட்சம் டன் என மொத்தம் 10 லட்சம் டன் உற்பத்தி திறனை எட்டுவதற்கு அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. Adani’s largest copper plant
2030-ம் ஆண்டுக்குள் உலகிலேயே மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலையாக வளருவதற்கும் அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே பசுமை மின்சக்தி மற்றும் எரிசக்தியில் அதானி குழுமம் அதிகளவில் முதலீடு செய்து வருகிறது.
இந்த துறைகளுக்கு காப்பரும் முக்கியம் என்பதால் காப்பர் உற்பத்தியிலும் முன்னிலைக்கு வருவதற்கு அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
அதானி காப்பர் ஆலையில் காப்பர் மட்டுமல்லாமல் தங்கம், வெள்ளி, பிளாட்டினம், செலினியம் போன்ற உப பொருட்களும் உற்பத்தி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் இந்தியாவிலேயே மிகப்பெரிய காப்பர் சுத்திகரிப்பு ஆலையாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இது வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஆலை.
ஆனால், சுற்றுச்சூழல் மாசுபடுவதாக தூத்துக்குடி மக்கள் போராட்டங்களை நடத்தியதால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அதானியின் காப்பர் ஆலை தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பாலக் பாஸ்தா!
சண்டிகர் தேர்தல் – ஜனநாயக படுகொலை : உச்ச நீதிமன்றம் காட்டம்!