அதானி விவகாரம்: நிர்மலா சீதாராமன் சொன்ன தகவல்!

Published On:

| By Kavi

அதானி விவகாரம் இந்திய முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் குறித்து, நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையை செய்யும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஒன்றிய நிதியமைச்சரும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, பங்குச் சந்தையில் இருந்து ரூ. 20,000 கோடிக்கான FPO (follow-on public offers) பங்குகளை திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடமே அவர்களின் நிதி திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் கவுதம் அதானி கூறி இருப்பதால்,

வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ADVERTISEMENT

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன்,

“இந்தியாவின் பெரும் நிதி கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது. FPO பங்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளன.

ADVERTISEMENT

அதானி விவகாரத்தில், நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யும். பங்குச் சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, சந்தையின் உறுதித் தன்மையை பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ராஜ்

பரந்தூரில் நிலம் கையகப்படுத்துவது எங்கள் வேலை அல்ல! : மத்திய அமைச்சர்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share