அதானி குழும பங்குகள் ஒரே நாளில் ரூ.90,000 கோடி சரிவு: காரணம் என்ன?

Published On:

| By christopher

அதானி குழும நிறுவன பங்குகள் ஒரே நாளில் ரூ.90,000 கோடி சரிவை கண்டுள்ளது. அதிகபட்சமாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்குகள் 13% சரிவடைந்துள்ளது. 2024-ம் ஆண்டில் அதானி கிரீன் எனர்ஜி மிக அதிக அளவில் சரிவை சந்தித்த நாளாக நேற்றைய (மார்ச் 13) நாள் மாறியுள்ளது.

இது போக, அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி எனர்ஜி, அதானி வில்மர், ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட்ஸ், என்.டி.டி.வி என அதானி குழுமத்தை சேர்ந்த எல்லா பங்குகளும் 4 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால், அதானி குழும நிறுவனங்கள் சுமார் 90,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பை இழந்துள்ளன.  இது அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த சந்தை மூலதனமான ரூ.15.85 லட்சம் கோடியில் 5.7%. ஆகும்.

இந்த நிலையில் எஸ்.பி.ஐ வங்கி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளதால், அதானி பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த நிதியாண்டு முடிவடைவதால், வழக்கமாகவே ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் இதுபோல சந்தை இறங்குவது வழக்கம் என்று பொருளாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

ராஜ்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: சருமம் பளபளக்க… இந்த மூன்றே பொருட்கள் போதும்!

கிச்சன் கீர்த்தனா : காஞ்சிபுரம் இட்லி… மிளகு ஸ்பெஷல்!

மீண்டும் எம்.எல்.ஏ ஆனார் பொன்முடி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share