அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்ச வழக்கா? – அதானி குழுமம் விளக்கம்!

Published On:

| By Selvam

அதானி குழும நிறுவனர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி மற்றும் அதானி க்ரீன் எனர்ஜி சிஇஓ வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க அதிகாரிகளால் சுமத்தப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் இன்று (நவம்பர் 27) மறுத்துள்ளது.

இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்ததாக கெளதம் அதானி, சாகர் அதானி உள்ளிட்டோர்  மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டி பிடிவாரன்ட் பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக இந்திய பங்குச்சந்தை பரிவர்த்தனை ஆணையத்துக்கு அதானி க்ரீன் எனர்ஜி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை (எஃப்சிபிஏ) மீறியதாக எங்களது இயக்குநர்கள் கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த செய்திகள் முற்றிலும் தவறானது.

அமெரிக்க நீதிமன்றம் பதிவு செய்துள்ள குற்றப்பத்திரிகையில் ஐந்து வழக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் கௌதம் அதானி, சாகர் அதானி, வினீத் ஜெயின் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக எந்த வழக்கிலும் அவர்கள் பெயர்கள்  குறிப்பிடவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

ADVERTISEMENT

மேலும், இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் குற்றப்பத்திரிகையில் இல்லை. லஞ்சம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக மட்டுமே குற்றப்பத்திரிகை கூறுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர்!

இவருக்கு இப்படி ஒரு விருப்பமா? – புதிய பாதை நடிகரின் புதிய ஆசை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share