என்.டி.டி.வியை வாங்கிய அதானி

Published On:

| By srinivasan

அதானி குழுமத்துக்கு உட்பட்ட AMG MEDIA NETWORK நிறுவனம் முன்னணி இந்திய தொலைக்காட்சி ஊடகமான NDTV யின் 26% பங்குகளை வாங்கியுள்ளது.

உலகின் டாப் 10 பணக்காரர்களில் மூன்றாம் இடத்திலும் இந்திய அளவில்  முதல் இடத்திலும் உள்ளார் அதானி.

ADVERTISEMENT

துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி, மின் பகிர்மானம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிவாயு உற்பத்தி மற்றும் பகிர்மானம், சமையல் எண்ணெய் உள்ளிட்ட விவசாயப் பொருட்கள், ரியல் எஸ்டேட், நிதி நிறுவனங்கள், மற்றும் பாதுகாப்புத் துறைக்கான ஆயுத உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் என அதானி குழுமம் கால் வைக்காத துறையே இல்லை என நிச்சயமாக சொல்லலாம்.

இந்த நிலையில் அதானி குழுமம் இப்போது முன்னணி தொலைக்காட்சி மீடியாவான NDTV யின் 26% பங்குகளை வாங்கியுள்ளது.

ADVERTISEMENT

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ஊடகத்தை வாங்கியிருப்பது இந்திய அளவில் விவாதிக்கப்படுகிறது.

பணத்தோட்ட பூபதி கெளதம் அதானி: அதிகாரத்தின் வடிவங்கள்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share