வைரலாகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘நிச்சயதார்த்த’ புகைப்படங்கள்!

Published On:

| By Manjula

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தம் நேற்று (மார்ச் 1) மும்பையில் நடந்து முடிந்துள்ளது.

சிம்பு நடிப்பில் வெளியான ‘போடா போடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான வரலட்சுமி தொடர்ந்து ‘தாரை தப்பட்டை’, ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’, ‘வெல்வெட் நகரம்’ என ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

தற்போது தனுஷின் ‘ராயன்’ படத்தில் முக்கிய வேடமொன்றில் நடித்து வரும் வரலட்சுமி விரைவில் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவிருக்கிறார்.

நேற்று வரலட்சுமிக்கும் தொழிலதிபர் நிகோலய் சச்தேவ் என்பவருக்கும் மும்பையில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் சரத்குமார், ராதிகா சரத்குமார் உட்பட நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

நடிகை ராதிகா சரத்குமார் இருவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தினை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, திருமணம் குறித்த தகவலை உறுதி செய்துள்ளார்.

ADVERTISEMENT

வரலட்சுமி – நிகோலய் இருவரும் கடந்த 14 வருடங்களாக நெருங்கி பழகி வருவதாகவும், விரைவில் இருவரின் திருமண தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“பாஜக, அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை” – சரத்குமார்

திரும்பத் திரும்ப கேட்போம்… தொகுதி பங்கீடு பற்றி திருமா பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share