சீதாவின் ரம்மிய வாழ்வு!

Published On:

| By Minnambalam Desk

வீழ்வது தோல்வியல்ல. விழுந்தே கிடப்பது தான் தோல்வி என்பார்கள். எனில் சீதாவுக்கு தோல்வியே இல்லை.

1985 ஆம் ஆண்டு பாண்டியராஜன் இயக்கிய ஆண்பாவம் படத்தின் மூலம் கதாநாயகியாக ஆனவர் சீதா. ஆயிரம் பூக்கள் மலரட்டும், குரு சிஷ்யன்,உன்னால் முடியும் தம்பி என்று பல வெற்றி படங்களின் நாயகி.

ADVERTISEMENT

புதிய பாதை படத்தில் நடித்தபோது பார்த்திபனுடன் காதல், கல்யாணம், குழந்தை என்று செட்டில் ஆனார் சீதா. நடிப்பதை நிறுத்தினார். ஆனால் சில வருடங்களில் கருத்து வேறுபாடு, இருவரும் பிரிந்தார்கள்.

மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். சின்னத் திரையில் பிசி ஆனார்.

ADVERTISEMENT

அங்கே ஒரு ரகசிய திருமணம் நடந்ததாகவும் அதுவும் சில ஆண்டுகளில் முடிந்ததாகவும் செய்தி.

மீண்டும் சில படங்களில் நடித்தார். அதில் வியாபாரி, காதல் அழிவதில்லை படங்கள் முக்கியமானவை. பிலிம் பேர் விருது, ஆந்திராவின் நந்தி விருதுகள் வந்தன.

ADVERTISEMENT

தெலுங்கில் ஒரு நாளைக்கு ஐந்து லட்ச ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்தார்.

சென்னை அய்யப்பன்தாங்கலில் ஒரு வீடு கட்டி படப்பிடிப்புகளுக்கு வாடகைக்கு விட்டார்.

தான் இயற்கை விவசாயம் செய்யும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு அவர் அம்மா இறந்தபோது, ” இப்போது நான் அனாதையாகிவிட்டேன்” என்று சமூக வலைதளங்களில் பதிந்து இருந்தார்.

வேறு யாராக இருந்தாலும் அப்படியே போயிருப்பார்கள்.

ஆனால் சீதா அப்படி இல்லை,

அண்மையில் அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களில் ஒட்ட முடி வெட்டிய தலை, (பார்த்திபனுக்காக மொட்டை போட்ட அனுபவம் சீதாவுக்கு ஏற்கனவே உண்டு) ஜீன்ஸ் சர்ட், தன்னம்பிக்கைக்கு லுக் என்று வேற மாதிரி .. இருக்கிறார் சீதா.

THE GLORY OF LIFE IS NOTIN NEVER FALLING; BUT IN RAISING WHENEVER YOU FALL என்பது ஓர் ஆங்கிலக் கூற்று.

சீதாவின் வாழ்வும் GLORY யாக இருக்கட்டும்.

— ராஜ திருமகன்

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share