சமந்தாவின் யஷோதா ரிலீஸ் தேதி!

Published On:

| By admin

நடிகை சமந்தா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் ‘யசோதா’ திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னமும் முடியாத நிலையில் படத்தின் வெளியீட்டு தேதியை இப்போதே அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

‘யசோதா’ படத்தை ஶ்ரீதேவி மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

ADVERTISEMENT

இந்தப் படத்தில் சமந்தா உடன், வரல‌ட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா ஷர்மா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது எனக் கூறிய தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ணபிரசாத் மேலும்பேசும்போது, இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் இந்திய அளவிலான பார்வையாளர்களை திரையரங்குகளுக்கு இழுக்கக் கூடிய கதைக் களத்தை கொண்டுள்ளது. நடிகை சமந்தா இந்த ‘யசோதா’ படத்தில் நடிப்பில் மட்டுமின்றி, சண்டைக் காட்சிகளிலும் நடித்து அசத்தியுள்ளார். வரும் மே மாத இறுதியில்தான் இந்தப் படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடையும் என்றார்.

**-அம்பலவாணன்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share