கட்டதுரை கெட்ட துரையா? – மலையாள நடிகை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

Published On:

| By Kumaresan M

riyaz khan

ஹேமா அறிக்கை காரணமாக மொத்த மலையாள திரையுலகமே அதிர்ந்து போய் நிற்கிறது. பட  வாய்ப்பு வழங்குவதற்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள நடிகைகள் அழைக்கப்படுவதாக பல நடிகைகள் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

சமீபத்தில் பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குனர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். புகாரையடுத்து, ரஞ்சித் கேரள பிலிம் அகாடமி தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ADVERTISEMENT

மற்றொரு மலையாள நடிகை ரேவதி சம்பத் மலையாள நடிகர் சங்கமான அம்மா பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் குற்றச்சாட்டை  முன்வைத்தார். இதையடுத்து சித்திக் மலையாள நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகைய சூழலில் தான் சித்திக் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ரேவதி வின்னர் பட நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

போட்டோகிராபர் ஒருவரிடத்தில் எனது செல்போன் எண்ணை ரியாஸ் கான் வாங்கி உள்ளார். அதன்பிறகு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி கேட்டு கொண்டார். அதற்கு  நான் மறுத்ததால் அவருக்கு என்னுடைய தோழிகளை அறிமுகம் செய்து வைக்கும்படி கேட்டு கொண்டார். செல்போனில் அவர் ஆபாசமாக பேசினார் என்றும் ரேவதி தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கேரளாவை சேர்ந்த ரியாஸ் கான் பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்திருப்பார். அதேபோல் வின்னர் திரைப்படத்தில் இவர் ‛பாடிபில்டர்’ கட்டத்துரை என்ற பெயரில் நடித்து அசத்தியிருப்பார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

நெருங்கும் தேர்தல்… சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரும் சிராக் பஸ்வான்

“துரைமுருகன் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது”: ரஜினி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share