வைரலான ராஷ்மிகாவின் போலி வீடியோ… மத்திய அமைச்சர் வார்னிங்!

Published On:

| By Manjula

actress rashmika mandana deep fake video

சமூக வலைதளங்களில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ வைரலாக பரவிய நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

AI தொழில்நுட்பம் வழியாக அவ்வப்போது நடிகர், நடிகைகளின் படங்களை மாற்றி சமூக வலைதளங்களில் பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக, இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அது உண்மையான வீடியோ என்று நினைத்து தொடர்ந்து ஷேர் செய்துள்ளனர்.

அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்த போது சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர்.

அது ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ்-இந்திய பெண்ணின் வீடியோ என்றும், AI Deep fake தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதைப்பார்த்த இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் இந்த போலி வீடியோவை பகிர்ந்து இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருக்கிறார். திரையுலகினர் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இன்று (நவம்பர் 6) தனது எக்ஸ் தளத்தில்,

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, இணையதளத்தை பயன்படுத்தும் அனைத்து மக்களின் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறது.

ஏப்ரல் 2023-ல் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை, அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் சட்டப்பூர்வ கடமையாக பின்பற்ற வேண்டும்.

எந்தவொரு பயனாளரும் தவறான தகவலை பகிரவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தவறான தகவல் குறித்து அரசிடம் பயனாளர்கள் புகார் அளித்தால் 36 மணி நேரங்களுக்குள் அவர்கள் குறிப்பிட்டவை சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படும்.

சமூக ஊடகங்கள் விதிகளை மதிக்காவிட்டால் அவர்களுக்கு எதிராக விதி 7 பயன்படுத்தப்படும்.

ஐபிசி விதிகளின் கீழ் அந்த நபர் குறிப்பிட்ட சமூக வலைதளம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்” என்று  தெரிவித்து இருக்கிறார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில் பாலாஜிக்குக் காவல் நீட்டிப்பு : அமலாக்கத் துறைக்கும் உத்தரவு!

கேரளா குண்டு வெடிப்பு: மார்ட்டினுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share