ஜெயிலர்: ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு

Published On:

| By Monisha

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கவிருக்கும் நடிகர்களின் பெயரை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 22 ஆம் தேதி சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. மேலும் படப்பிடிப்பும் அன்றே தொடங்கியது.

இருப்பினும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.

தற்போது சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் பெயரை வெளியிட்டுள்ளது.

தற்போது, சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வந்த நிலையில், அது உறுதியாகியுள்ளது. யோகி பாபு ஏற்கனவே ரஜினியுடன் தர்பார் படத்தில் நடித்திருந்தார்.

மோனிஷா

ரஜினியின் ஜெயிலர் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது: படப்பிடிப்பு தொடங்கியது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share