நடிகை ரம்யா கிருஷ்ணன் விவாகரத்தா? கணவர் சொல்வது என்ன?

Published On:

| By Kumaresan M

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.  இவர், மறைந்த நடிகர் சோவின் சகோதரி மகள் ஆவார். படையப்பா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெல்லாம்  பிரபலமானார்.  பாகுபலி படத்தில் ராஜமாதாவாக ரசிகர்களை கவர்ந்தார். 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய இரண்டு படங்களை இயக்கிய டைரக்டர்  கிருஷ்ணவம்சியை காதலித்து  திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். மகன் ரித்விக்கின் புகைப்படங்களையோ, கணவரின் புகைப்படங்களையோ   இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்யும் பழக்கம் ரம்யா கிருஷ்ணனுக்கு இல்லை. எப்பொழுதாவது அரிதாக தான் ரித்விக், கிருஷ்ண வம்சியின் புகைப்படங்களை வெளியிடுவார். மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியே பேச விரும்பாதவர் ரம்யா கிருஷ்ணன்.

ADVERTISEMENT

இந்நிலையில் ரம்யா கிருஷ்ணனுக்கும், கிருஷ்ண வம்சிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து பிலிம்பீட் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த கிருஷ்ண வம்சி, “நானும், ரம்யா கிருஷ்ணனும் பிரியவில்லை. நாங்கள் விவாகரத்து பெறவில்லை.

ADVERTISEMENT

வேலை காரணமாக நான் ஹைதராபாத்தில் இருக்கிறேன். உடனே,  விவாகரத்தாகிவிட்டது என்று சொல்வது வேதனையாக உள்ளது. வீட்டில் ரம்யா கிருஷ்ணன் ரொம்ப ஜாலியான ஆளாக இருப்பார்.  காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்.  என் மனைவி இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். நல்ல மனைவியாக மகனுக்கு தாயாக ரம்யா கிருஷ்ணன்  எங்கள்  குடும்பத்தை வழி நடத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

ADVERTISEMENT

எம்.குமரேசன்

 நாக சைதன்யா மீண்டும் திருமணம் : சோபிதா துலிபாலா மனைவி ஆகிறார்!

“அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்” ஸ்டாலின், சந்திரபாபுவின் கருத்துக்கு மக்களின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share