ரன்வீரின் நிர்வாண படப்பிடிப்பை ஆதரிக்கும் நடிகைகள்!

Published On:

| By admin

ரன்வீர் சிங்கின் நிர்வாண படப்பிடிப்பை ஆதரித்துள்ள பரினீதி சோப்ரா, ‘இதை வேறு எந்த நடிகரும் செய்ய முடியாது’ என்றும் கூறியுள்ளார்.

நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் ‘பேப்பர் மேகசின்’ என்னும் வார இதழுக்கு நிர்வாண புகைபடத்திற்கு போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். இது பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த புகைப்படங்களுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்தி நடிகையான பரினீதி சோப்ரா அவர் ஒரு படைப்பாற்றல் கலைஞர் என்று ரன்வீரை புகழ்ந்துள்ளார்.

ரன்வீரைப் போல போட்டோஷூட் செய்ய எந்த நடிகரையும் நினைத்துப் பார்க்க முடியாது. “நான் அவரை அறிந்த நாளிலிருந்து ஒரு உண்மையான படைப்பாற்றல் கலைஞர், அது அவர் நடிகராக மாறுவதற்கு முன்பே இருந்தது. அவர் ஒரு சுதந்திரமான படைப்பாளி. எதுவும் அவரைத் தடுக்கவில்லை. இது ஒரு கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறந்த தரம். உங்களால் மட்டுமே ஏதாவது ஒன்று செய்ய முடியும் என்றால், அதைவிட உயர்ந்த பாராட்டு என்னவாக இருக்கும்?” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மறுபுறம், ரன்வீரின் பெஃபிக்ரே உடன் நடித்த வாணி கபூர், “ரன்வீர் ஒரு கலைஞன் மற்றும் அதில் சிறந்தவர். அவரது பரிசோதனை மற்றும் சரியான அழகியல் உணர்வுகளுடன் சிறந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.

மோனிஷா

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share