தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சூப்பர்ஸ்டார்களாக திகழும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் சிம்பு. actress nidhi agerwal reply on marriage with simbu
1984ஆம் ஆண்டு அவரது தந்தையின் இயக்கத்தில் வெளியான ’உறவைக் காத்த கிளி’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக சிம்பு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட படங்களில் அவர் குழந்தையாக கலக்கினார்.
தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு வெளியான ’காதல் அழிவதில்லை’ படத்தில் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அதன்பின்னர் சுமார் 20ஆம் ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதற்கிடையே 42 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமீபத்தில் அவருடன் ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் சினியுலகம் யூடியூப் சேனலில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நிதி அகர்வால், “நீங்கள் ஒரு பிரபலமாக பொது வாழ்க்கையில் வந்துவிட்டால் உங்களை பற்றிய ஏகப்பட்ட வதந்திகள், குறிப்பாக திருமண வதந்திகள் வருவதெல்லாம் சகஜம் தான். மக்களுக்கும் அதன் மீது அதிக ஆர்வம் இருப்பதால் தான் அவையெல்லாம் பரவுகின்றன.
நானும் சிறுவயதில் மற்ற நடிகர்கள் குறித்து தேடித்தேடி படிப்பதில் ஆர்வம் காட்டினேன். அதனையெல்லாம் நினைத்துக்கொண்டு நின்றுவிடக்கூடாது. நானும் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை” எனத் தெளிவாக பதில் அளித்துள்ளார்.