Nayanthara கனடாவில் கடை திறந்த நயன்தாரா

Published On:

| By Manjula

actress nayanthara business canada

நடிகை நயன்தாரா தன்னுடைய பிசினஸை கனடாவிலும் விரிவுபடுத்தி இருக்கிறார். அதுகுறித்து பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையும், ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான நயன்தாரா அடுத்ததாக ‘டெஸ்ட்’, ‘மண்ணாங்கட்டி 1960’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி பிசினஸிலும் நயன்தாரா ஈடுபாடு காட்டி வருகிறார்.

சம்பாதிக்கும் பணத்தினையும் அதில் முதலீடு செய்து வருகிறார். அந்தவகையில் 9 ஸ்கின் என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் பிராண்ட் ஒன்றினை நயன்தாரா நடத்தி வருகிறார். கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஆன்லைனில் இதன் விற்பனை துவங்கியது. இந்த நிறுவனத்தில் இயக்குநரும், நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனும் பார்ட்னராக இருந்து வருகிறார்.

actress nayanthara business canada

9 ஸ்கின் மட்டுமின்றி பெமி 9 என்ற பெயரில் சானிடரி நாப்கின் விற்பனையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். அதோடு ‘தி லிப் பாம் கம்பெனி’ ஒன்றினையும் பங்குதாரருடன் இணைந்து நடத்தி வருகிறார்.  இந்தநிலையில் அடுத்தகட்டமாக ‘9 ஸ்கின்’ பொருட்களுக்கான கடையினை கனடாவிலும் நயன்தாரா திறந்துள்ளார்.

இதுகுறித்து நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”ஹலோ கனடா! 9 ஸ்கின் பொருட்கள் இப்போது கனடாவிலும் கிடைக்கிறது”, என மகிழ்ச்சியுடன் புகைப்படம் பகிர்ந்து தெரிவித்து இருக்கிறார். அவரின் இந்த போஸ்டினை ரசிகர்கள், நட்சத்திரங்கள் என ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

actress nayanthara business canada

இதனால் சுமார் 18 மணி நேரத்திலேயே அவரின் போஸ்டிற்கு 2 லட்சத்து 63 ஆயிரம் லைக்குகள் கிடைத்துள்ளன. அதோடு புகைப்படமும் வைரலாகி வருகிறது. ஒருபுறம் நடிப்பு மறுபுறம் பிசினஸ் என இரண்டையுமே நயன்தாரா திறமையாக சமாளித்து, அதில் முன்னேற்றமும் அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிறை தண்டனை நிறுத்திவைப்பு : மீண்டும் எம்.எல்.ஏ.வாகும் பொன்முடி?

மக்களவை தேர்தல் தள்ளிப்போகிறதா? – முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பேட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share