’சீரியலில் நடிக்காததை விட இதுதான் கஷ்டமாக இருக்கு’ : மைனா வேதனை!

Published On:

| By christopher

actress myna about his new life in cinema

சரவணன் மீனாட்சி சீரியலில் மைனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் நந்தினி. actress myna about his new life in cinema

அதனைத்தொடர்ந்து வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களிலும், சட்னி சாம்பார் என்ற வெப் தொடரிலும் நடித்தார்.

ADVERTISEMENT

இதனால் சமீபகாலமாக மைனாவை சின்னத்திரை பக்கமே பார்க்க முடியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து தற்போது லவ் ஆக்சன் டிராமா என்ற பெயரில் யூடியூப் சேனல் ஆரம்பித்த அவர், கருப்பி, விதவை, வேலைக்காரி, புள்ளத்தாச்சி, மறுமணம் என்ற பெயரில் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய கதைகளில் நடித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா வாழ்க்கை, 2வது கல்யாண வாழ்க்கை என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

சீரியலில் இருந்து ஒதுங்கியது கிடையாது!

அதில், “நான் சீரியலை விட்டு விலக வேண்டும் என்று எப்போதுமே முடிவு செய்தது கிடையாது. ஆனால் சில வருடங்களாக எனக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

ADVERTISEMENT

நான் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிப்பதால் இனி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று நினைத்து விட்டனர். ஆனால், நான் பார்க்கும் அனைத்து இயக்குநரிடமும், தயாரிப்பாளரிடமும் எனக்கு வேலை தருமாறு கேட்டு கொண்டு தான் இருக்கிறேன்.

சீரியல் வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக செய்வேன். நான் எப்போதுமே சீரியலில் நடிக்க கூடாது என்று ஒதுங்கியது கிடையாது” என்று தெரிவித்தார்.

பெண்கள் மீதான பார்வை மாறவில்லை!

மேலும் அவர், ”எனக்கு 2வது கல்யாணம் ஆகி 10வது நாளில் பீரியட் ஆனதால், என் மாமியார் ‘என்ன நல்ல செய்தி சொல்லுவீங்க’னு நினைச்சேன்’ என வருத்தப்பட்டார். அது அடுத்த மாதத்திலும் மீண்டும் நடந்தது.

கேட்பவர் விளையாட்டாக கேட்டாலும் கூட எனக்கு ரொம்ப பாதித்தது. இதுமட்டுமல்ல ’என்ன மைனா, இப்போ எல்லாம் சீரியலில் உங்க பேரையே காணோமோ? என்ற சிரித்தப்படியே கேட்டாலும் எனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது நாங்கள் எடுக்கும் மலடி, மறுமணம், விதவை உள்ளிட்ட கதைகளில் எல்லாமே இந்த சமூகத்தில் ஒரு பெண்ணின் மீது நடக்கும் அத்துமீறல்களை பேசுகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இருந்த பெண்கள் மீதான பார்வை அப்படியே இருப்பது வேதனையளிக்கிறது” என்று மைனா தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share