எல்லாமே ரொம்ப மோசமா இருக்கு… வைரலாகும் தங்கலான் நடிகையின் பதிவு!

Published On:

| By Manjula

malavika mohanan social media

நடிகை மாளவிகா மோகனின் எக்ஸ் தள பதிவொன்று சமூக வலைதளங்களில் வெகு வேகமாகப் பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனனை, மாஸ்டர் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது.

தொடர்ந்து மாறன் படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்த அவர், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமின்  ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கும் தங்கலான் திரைப்படம், மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வருகிறது.

https://twitter.com/MalavikaM_/status/1742510369883500595

இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் தளத்தில் இண்டிகோ விமானத்தின் சேவையை விமர்சித்து, நடிகை மாளவிகா பகிர்ந்திருக்கும் ட்வீட் ஒன்று வேகமாகப் பரவி வருகிறது.

அதில், ”ஜெய்ப்பூர் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவை ரொம்ப மோசமாகவும், மனம் புண்படக்கூடிய வகையிலும் உள்ளது. பணியாளரின் சேவை அதைவிடவும் மோசம்” என விமர்சித்துள்ளார்.

அவரின் ட்வீட்டுக்கு கீழே இண்டிகோ நிறுவனத்தின் ஜெய்ப்பூர் விமான சேவை மட்டுமல்ல, அவர்களின் ஒட்டுமொத்த விமான சேவையே அவ்வாறு தான் இருக்கிறது என ரசிகர்களும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இண்டிகோ மாளவிகாவிற்கு பதில் அளித்துள்ளது. அதில், ”இதற்காக நங்கள் மிகவும் வருந்துகிறோம். இதுகுறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொண்டு மீண்டும் உங்களை தொடர்பு கொள்கிறோம்,” என வழக்கம்போல விளக்கம் அளித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

பிரதமரை சந்திக்க போவது ஏன்? – உதயநிதி பதில்!

சென்னையில் 12 மாடி கட்டிடத்திற்குள் மெட்ரோ ரயில் நிலையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share