ஃபிட்னஸில் கவனம் செலுத்தும் ஜோதிகா

Published On:

| By Selvam

Actress Jyothika concentrate on fitness

தென்னிந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா.

திரை உலகில் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக இருந்த காலகட்டத்தில் நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து சில ஆண்டுகள் பிரேக் எடுத்துக் கொண்டார் நடிகை ஜோதிகா.

2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்து அசத்தினார்.

அதன்பிறகு ஜோதிகா நடிப்பில் வெளியான மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், காதல்- The core போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.

தற்போது தனது பிள்ளைகளின் படிப்பிற்காக சூர்யாவும் ஜோதிகாவும் மும்பையில் செட்டில் ஆகி உள்ளனர்.

அதே நேரத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பின் நடிகை ஜோதிகா ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகர் அஜய் தேவ்கனுடன் ஜோதிகா இணைந்து நடித்துள்ள சைத்தான் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படம் நாளை ( மார்ச் 8) ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தை தொடர்ந்து Sri, Dabbacartel ஆகிய ஹிந்தி படங்களிலும் ஜோதிகா நடித்து உள்ளார்.

இந்நிலையில், நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தனது உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காக Squats, Weight Lifting, Pull-ups, Push-ups, Lunges, தலை கீழாக நிற்பது, படிக்கட்டில் frog jump செய்வது என ஜிம்மில் வெறித்தனமாக ஜோதிகா வொர்க் அவுட் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Video

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள ஜோதிகா “ஃபிட்னஸ் என்பது உடல் எடையை குறைப்பது அல்ல, ஆனால் வாழ்க்கையை திரும்பப் பெறுவது” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் சமீபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகளை வழங்கிய தமிழக அரசு 36 வயதினிலே திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகை ஜோதிகாவிற்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலப்பட ஏலக்காயால் ஏற்றுமதி சரிவு: ஸ்பைசஸ் வாரியம் எடுத்த முடிவு!

வேலைவாய்ப்பு: NIOT நிறுவனத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share