ஹிந்தியில் சூப்பர் 30, கன்பத் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விகாஸ் பால். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சைத்தான். இந்த படத்தில் அஜய் தேவ்கன், ஜோதிகா, மாதவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குஜராத்தி மொழியில் வெளியான “வாஷ்” என்ற படத்தின் ரீமேக்காக தான் சைத்தான் படம் உருவாகியுள்ளது. பிளாக் மேஜிக் மற்றும் ஹாரர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் குஜராத்தில் பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
தற்போது அந்த படத்தின் கதையை ஹிந்தி மொழி ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து படமாக்கி உள்ளார் இயக்குனர் விகாஸ் பால். இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
https://twitter.com/jiostudios/status/1750369515765203028
இந்நிலையில் இன்று (ஜனவரி 25) இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. டீசரை பார்க்கும் போதோ படம் நிச்சயமாக செம த்ரில்லிங் மற்றும் திகிலாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. வரும் மார்ச் 8 ஆம் தேதி சைத்தான் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்டில் ஜான் படத்தின் பிறகு கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்கு பின் சைத்தான் படம் மூலமாக ஜோதிகா ஹிந்தி சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஶ்ரீ, டப்பா கார்டெல் ஆகிய ஹிந்தி படங்களிலும் ஜோதிகா நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் தடுத்து நிறுத்தம்: பயணிகள் அவதி!
ஆணாதிக்கம் காரணமாகவே சிறுவர்கள் மீது பாலியல் வன்கொடுமை தொடர்கிறது: அலங்கார் ஷர்மா