தெகிடி பட நடிகைக்கு திருமணம்… யாரு மாப்பிள்ளை தெரியுமா?

Published On:

| By christopher

actress janani engagement with pilot

தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்ததை தொடர்ந்து பிரபல நடிகை ஜனனிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். actress janani engagement with pilot

சென்னையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஜனனி ஐயர். ஆஸ்திரேலியாவில் படித்துக் கொண்டிருந்தபோது கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.

தமிழ் திரையுலகில் 2009ஆம் ஆண்டு வெளியான ’திரு திரு துறு துறு’ படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனார். எனினும் 2011ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆன ‘அவன் இவன்’ திரைப்படம் தான் அவரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அதன்பின்னர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்த தெகிடி திரைப்படம் அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது.

அதன்பின்னர் 2018ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு அதில் ரசிகர்களின் ஆதரவுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் இன்று இன்ஸ்டா பக்கத்தில் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

அவர் விமானியாக பணிபுரியும் ரோஷன் ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இன்று அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

அதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த நிலையில், அவருக்கு திரையுலகினர் பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share