நடிகை சித்ரா மரண வழக்கு: கணவர் ஹேம்நாத் விடுதலை!

Published On:

| By Selvam

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 10) தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடிகை சித்ரா சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சித்ராவின் தந்தை காமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவரது கணவர் ஹேம்நாத் மீது தற்கொலைக்கு தூண்டியதாக நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக ஹேமந்த்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அவரை கைது செய்தனர். பின்னர் 2021-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கின் விசாரணையானது திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஹேம்நாத்துக்கு எதிராக உரிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று அவரை விடுதலை செய்து நீதிபதி ரேவதி இன்று தீர்ப்பளித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒலிம்பிக்: 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை குறைத்த அமன்… வினேஷ் போல ஆகாமல் தப்பித்தார்!

முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ ரெய்டு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share