தமிழ்நாட்டில் சந்திக்கவே முடியாத இருவர் முதலமைச்சரும், அஜித்தும்தான். நடிகர் சங்கக் கட்டட நிதிக்கு அஜித் ரூ.10 கோடி கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதை, எங்கு சென்று உறுதிப்படுத்துவது. அதேசமயம், இந்த மாதிரி வெளியான தகவல்கள் பொய்யாகிப்போனதும் கிடையாது. சரி, விஷயத்துக்கு வருவோம். நடிகர் சங்கக் கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்கு நடிகர்களெல்லாம் ஒவ்வொரு அணியாக பிரிந்து கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அந்த கிரிக்கெட் போட்டியின் டிக்கெட், ஸ்பான்சர் என வரும் பணத்தில் நிதிதிரட்டி கட்டடம் கட்டும் முடிவில் இருக்கிறார்கள்.
சமீபத்தில், கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப நடைபெற்ற பேச்சுவார்த்தையில், சன் டிவி ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. 9 கோடி… இல்லை இல்லை 13 கோடி என சொல்லப்பட்டு வந்த தொகைகளையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டு 17 கோடி என்ற உண்மை ஒப்பந்தம் வெளியாகியிருக்கிறது.
