நாய்களை வளர்க்க ரூ.45 கோடி ஒதுக்கிய நடிகர்: யார் தெரியுமா?

Published On:

| By indhu

Actor who allocated Rs 45 crore property to raise dogs - do you know who?

நாய்களை வளர்ப்பதற்காக ரூ.45 கோடி சொத்தை இந்தி சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி ஒதுக்கி உள்ளார்.

இந்தி சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் மிதுன் சக்கரவர்த்தி. இவர் தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

அந்த கட்சியின் சார்பில் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு அவர் தன்னுடைய உடல் நிலையை காரணம் காட்டி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு பிரதமர் மோடி முன்னிலையில் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்தார்.

இந்நிலையில் நடிகர் மிதுன் பற்றிய ஒரு சுவாரசிய தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது முன்னணி நடிகர்கள் பலரும் சொத்துக்கள் வாங்குவதிலும், ஆடம்பரமாக செலவு செய்வதிலும் ஆர்வம் காட்டும் நிலையில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி நாய்களுக்காக ரூ.45 கோடி சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

அதோடு தன்னுடைய நண்பர்கள் வளர்க்கும் நாய்களுக்காகவும் செலவு செய்கிறாராம். இவருக்கு மும்பை அருகே உள்ள மட் தீவில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு சுமார் 116 நாய்களை மிதுன் சக்கரவர்த்தி வளர்த்து வருகிறார்.

அங்கு நாய்களுக்கு விளையாட்டு மைதானம், உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். நாய்களை பாதுகாக்க பாதுகாப்பு பணியாளர்களை நியமித்துள்ளார்.

இதுகுறித்த தகவலை மிதுன் சக்கரவர்த்தியின் மருமகளான நடிகை மதால்சா ஷர்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில், நாய்களை வளர்ப்பதற்காக ரூ.45 கோடி மதிப்புள்ள சொத்துகளை ஒதுக்கிய மிதுன் சக்கரவர்த்தியின் செயலை பலரும் பாராட்டி வருவதோடு, சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சனாதன பேச்சு : உதயநிதிக்கு ஜாமீன் வழங்கிய பெங்களூரு கோர்ட்டு!

”லாரா மட்டுமே எங்களை நம்பினார்“ : ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share