தலைவர்168 முதல்நாள் ஷூட்டிங்: நெகிழும் கபாலி விஸ்வநாத்

Published On:

| By Balaji

தலைவர் 168 திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து நடிகர் விஸ்வநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்-168 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஆரம்பமானது. இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிவருகிறார். நேற்று(டிசம்பர் 18) முதல்நாள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டது.

இந்தப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு அனுபவம் குறித்து பகிர்ந்த விஸ்வநாத், ‘தலைவர்168 படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டதை நினைத்து பெருமையடைகிறேன். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து தினந்தோறும் மகிழ்ச்சி அடைந்து வருகிறேன். உலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் ஏற்கனவே நான் ‘கபாலி’ படத்தில் நடித்துள்ளேன். தற்போது மீண்டும் அவருடன் நடிக்கும் வாய்ப்பை கொடுத்த சிறுத்தை சிவா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று நெகிழ்ச்சியாகக் குறிப்பிட்டுள்ளார்.

கபாலி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் தலைவர்168-இல் ரஜினிகாந்துடன் நடிக்கும் அனுபவம் அவருக்கு எத்தகைய பெருமிதத்தை அளித்துள்ளது என்பது அவரது பதிவின் மூலம் தெரிகிறது. இவர் சண்டக்கோழி-2 திரைப்படத்திலும் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share