நடிகர் விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து!

Published On:

| By Jegadeesh

நடிகர் விஷால் நடித்து வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது.

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’’மார்க் ஆண்டனி’’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இது விஷாலின் 33-வது படமாகும். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘Pan India’ திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஈவிபி பிலிம் சிட்டியில் இன்று(பிப்ரவரி 28 ) நடைபெற்ற படப்பிடிப்பின் பொழுது லைட் மேன் தலையில் லைட் கம்பம் விழுந்ததில் காயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் இதே படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!

சங்கமித்ரா: ஸ்ருதிஹாசனுக்கு பதில் பூஜா ஹெக்டே

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share