விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை ஒட்டி நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மேடையில் நடிகர் விஷால் திடீரென மயங்கி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடிகர் விஷால் உடல்நிலை கடந்த ஜனவரி மாதம் பேசுபொருளானது. மதகஜராஜா பட நிகழ்ச்சியில் பேசுகையில் நடிகர் விஷால் கைகளில் நடுக்கம் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக விஷால் தரப்பில் விளக்கமும் தரப்பட்டது.
இந்த நிலையில் விழுப்புரம் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி மேடையில் நின்று கொண்டிருந்த நடிகர் விஷால், திடீரென மேடையிலேயே சரிந்து விழுந்தார். இதனால் அங்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மயக்கம் தெளிந்தது. இதனால் அச்சமும் பரபரப்பும் அடங்கியது.
