Lok Sabha Election 2024: விஜய் பாணியில் வந்து வாக்களித்த விஷால்

Published On:

| By Manjula

தமிழ்நாடு முழுவதும் வாக்குப்பதிவு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், முதியவர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என, அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் விஷால் சைக்கிளில் வந்து, தன்னுடைய வாக்கை செலுத்தி இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தலையில் தொப்பியுடன் டீஷர்ட், ஜீன்ஸ் உடையில் இருக்கும் விஷால் சைக்கிளில் சோலோவாக வந்து, தனது ஜனநாயக கடமையினை ஆற்றியுள்ளார்.

கடந்த 2௦21-ம் ஆண்டு நடிகரும், தவெக கட்சித் தலைவருமான விஜய் கருப்பு-சிவப்பு நிற சைக்கிளில் வந்து வாக்களித்து இருந்தார்.

விஜயை பல்வேறு விஷயங்களில் பின்பற்றும் நடிகர் விஷால் அவர்போலவே தற்போது சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தி உள்ளது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

விரைவில் கட்சி தொடங்கி, 2௦26-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக, விஷால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி-விஷால் கூட்டணியில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் திரையரங்குகளில், வருகின்ற 26-ம் தேதி வெளியாகிறது.

-மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாக்களிக்க முடியாமல் திரும்பிய நடிகர் சூரி வேதனை!

Lok Sabha Election 2024: வெள்ளை நிற ஆடையில் வந்த பிரபலங்கள்… என்ன காரணம்?

”ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்” : விஜய் வேண்டுகோள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share