துருவ நட்சத்திரம் ட்ரெய்லர் வெளியானது!

Published On:

| By Kavi

dhuruva natchathiram movie trailer released

நடிகர் விக்ரமின் நடிப்பில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.

பல வருடங்களாக வெளியாகாமல் தள்ளிப்போன துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் இயக்குனர் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக 2015ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அதன்பின் சூர்யா – கௌதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகிவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் நடிகர் சூர்யாவிற்கு பதில்  விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்டார்.

பல பிரச்சனைகளுக்கு பின் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் கௌதம் மேனனுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருந்ததால், துருவ நட்சத்திரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என்பதற்காக இயக்குனர் கௌதம் மேனன் நடிகராக அவதாரம் எடுத்தார். பல திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் தொடர்ந்து கௌதம் மேனன் நடிக்க தொடங்கினார்.

பல போராட்டங்களுக்குப் பின் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தை முழுமையாக முடித்துவிட்டு ரிலீஸ் செய்ய தயாராகி விட்டார்.

சமீபத்தில் ஒரு இன்டர்வியூவில் துருவ நட்சத்திரம் படம் குறித்து இயக்குனர் கௌதம் பேசியபோது, துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸில் துருவ நட்சத்திரம் இரண்டாம் பாகத்திற்கான லீட் இருக்கும்.

இந்த படத்தின் மூலம் ஒரு தனி யுனிவர்ஸை உருவாக்க உள்ளதாக இயக்குனர் கௌதம் கூறியுள்ளார்.

தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரெய்லரை படக் குழு இன்று (அக்.24) வெளியிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாஜ் தீவிரவாத தாக்குதலில் இருந்து ட்ரெய்லர் தொடங்குகிறது. அதன் பின் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுகம். ட்ரெய்லர் முழுக்க கிரிக்கெட்டை தொடர்புபடுத்தி எழுதப்பட்டுள்ள வசனங்கள் சூப்பர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸாக இயக்குனர் கௌதம் மேனனும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார். பக்கா ஆக்சன், விக்ரமின் ஸ்டைலான லுக் என செம மாஸாக உள்ளது துருவ நட்சத்திரம் ட்ரெய்லர்.

நீண்ட நாட்கள் படமாக்கப் பட்டிருந்தாலும் ட்ரெய்லரில் அப்படி தெரியவில்லை. துருவ நட்சத்திரம் படம் விக்ரமுக்கும் கௌதம் மேனனுக்கும் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

ஊரப்பாக்கத்தில் சோகம்: ரயில் மோதி 3 சிறுவர்கள் பலி!

பாதி நேரம் என்னை பற்றியே பேச்சு: ஸ்டாலினுக்கு எடப்பாடி கேள்வி!

தொடரும் விபத்துகள்… கொத்துக் கொத்தாக போகும் மனித உயிர்கள்! கவனிக்குமா அரசு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share