விஜய் பிரச்சார சுற்றுப்பயணம்… எங்கெங்கு தெரியுமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Actor Vijay's campaign tour plan revealed

விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் இன்று (செப்டம்பர் 9) மனு ஒன்றை அளித்துள்ளார்.

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் வரும் 13ஆம் தேதி தனது முதற்கட்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தை திருச்சியில் இருந்து தொடங்க இருக்கிறார்.

ADVERTISEMENT

இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால், விஜய்யின் சுற்றுப்பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுப்பணத்திற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் விஜய்யின் சுற்று பயண விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 13ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் தவெக தலைவர் விஜய் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த தினங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி 15 சனிக்கிழமைகள் மற்றும் 1 ஞாயிற்றுக்கிழமையில் இந்த சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share