பெற்றோரை சந்தித்த விஜய்: புகைப்படம் வைரல்!

Published On:

| By Selvam

நடிகர் விஜய் தனது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோரை சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார் நடிகர் விஜய். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு விஜய் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார்.

அந்தவகையில், விரைவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை சந்தித்து பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.

உலக பட்டினி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மே 28-ஆம் தேதி பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டும் என்று நேற்று அறிக்கை வெளியிட்டார்.

ஒருபக்கம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் பிஸியாக இருந்தாலும், கட்சி பணிகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறார்.

இந்தநிலையில், தனது பெற்றோர் சந்திரசேகர், ஷோபா ஆகியோரை விஜய் இன்று சந்தித்துள்ளார். இந்த புகைப்படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விஜய் ரசிகர்கள் இந்த படத்தை சோஷியல் மீடியாவில் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

T20 World Cup: நியூயார்க் பறந்த இந்திய கிரிக்கெட் அணி!

லுக் அவுட் நோட்டீஸை நீக்க வேண்டும்: முதல்வர் தனிப்பிரிவில் சுப.உதயகுமார் மனு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share