நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளை முன்னிட்டு கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை ‘லியோ’ படக்குழு இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ். த்ரிஷா, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.
இச்சூழலில், லியோ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் இன்று (ஜூலை 29) வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இவருடைய கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
Meet #AntonyDas 🔥🔥
A small gift from all of us to you @duttsanjay sir! It was indeed a pleasure to work with you!🤜🤛#HappyBirthdaySanjayDutt ❤️#Leo 🔥🧊 pic.twitter.com/UuonlCF3Qa— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 29, 2023
முன்னதாக ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
