நவம்பர் 27 ஆம் தேதியன்று திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். vijay did not wish udhayanidhi
திமுகவினர் உதயநிதியின் பிறந்தநாளை தமிழகம் முழுதும், தமிழகத்துக்கு வெளியேயும் நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு அளித்து பிரம்மாண்டமாக கொண்டாடினர்.
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று மாலை அமைச்சர் உதயநிதி ஓர் அறிக்கை வெளியிட்டார்.
அதில் முதலமைச்சர் தொடங்கி திமுகவின் தொண்டர்கள் வரை தனக்கு வாழ்த்து தெரிவித்ததை விளக்கமாக குறிப்பிட்டிருந்தார்.
நான்கு பக்கங்கள் கொண்ட அறிக்கையில் நான்காவது பக்கத்தில் தன்னை வாழ்த்தியவர்களின் பெயர் பட்டியலையும் குறிப்பிட்டிருந்தார்.
அதில் சினிமா துறையில், “சூப்பர் ஸ்டார் ரஜினி சார், உலக நாயகன் கமல் சார் (கமல்ஹாசனை அரசியல்வாதிகள் பட்டியலில் சேர்க்காமல் சினிமாக் காரர்கள் பட்டியலில்தான் உதயநிதி வைத்துள்ளார்), சத்தியராஜ் சார், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சார், இயக்குனர்கள் அருண் ராஜா காமராஜ் சார், மாரி செல்வராஜ் சார், சகோதரர்கள் சிவகார்த்திகேயன், சந்தானம், சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ், முரளி ராமசாமி உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்”என முக்கியமான பெயர்களை பட்டியலிட்டுள்ளார் உதயநிதி.

இந்த பட்டியலில் நடிகர் விஜய், அஜீத் ஆகியோரது பெயர்கள் இல்லை. இதன் மூலம் அவர்கள் உதயநிதியை பிறந்தநாளன்று வாழ்த்தவில்லையா என்ற கேள்வி எழுகிறது.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க வட்டாரத்தில் பேசியபோது, “விஜய் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார். அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார். பெரியார், காமராஜர், அம்பேத்கர் ஆகியோரையே தனது அரசியல் பாதைக்கான ஆளுமைகளாக முன்னிறுத்தியுள்ளார்.
ஆகஸ்டு மாதம் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் தமிழகம் முழுவதும் அவருக்கு மக்கள் இயக்கம் மூலம் மரியாதை செலுத்தினார். அக்டோபர் மாதம் அன்புமணிக்கு வாழ்த்து தெரிவித்தார். ஆனால் நவம்பர் மாதம் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தால் உதயநிதியின் செய்திக் குறிப்பில் விஜய் பெயர் இடம்பெற்றிருக்கும்.
அரசியலில் உதயநிதி தலையெடுக்கும்போது தான்… களத்தில் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார் விஜய்.
இந்த நிலையில் உதயநிதிக்கு தனிப்பட்ட நண்பராக வாழ்த்து தெரிவித்தால் கூட அது அரசியல் சாயம் பூசப்பட்டு பெரிதாக்கப்படுமோ என்பதால் விஜய் தவிர்த்திருக்கலாம்” என்கிறார்கள்.
உதயநிதிக்கு விஜய் வாழ்த்து சொன்னாலும் செய்திதான்… வாழ்த்து சொல்லாவிட்டாலும் செய்திதான்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-வேந்தன்
BiggBossDay57: அனன்யாவையும் விட்டு வைக்காத விஷ்ணு… பூர்ணிமாவை வெளியேற்ற மாயா பிளான்
உத்தரகாண்ட் மீட்பு பணி: கைகொடுத்த ’எலி துளை’ சுரங்கம் தோண்டும் முறை!
vijay did not wish udhayanidhi
