கள்ளச்சாராய மரணம்: கள்ளக்குறிச்சியில் விஜய்…. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்!

Published On:

| By Selvam

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் இன்று (ஜூன் 20) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் கருணாபுரம் கோமுகி ஆற்றங்கரையோரத்தில் இன்று தகனம் செய்யப்பட்டது.

இந்தநிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்வதற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைவர் விஜய் இன்று மாலை 6.30 மணிக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் உடல் நலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் கூற உள்ளார்.

தமிழக அரசின் அலட்சியத்தின் காரணமாக தான் கள்ளச்சாராய மரணம் நிகழ்ந்துள்ளது என்று விஜய் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

செல்வம் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கள்ளச்சாராய மரணம்: கனமழைக்கு இடையே உடல்கள் தகனம்!

விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share