நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி காலமானார் – திரைபிரபலங்கள் அஞ்சலி!

Published On:

| By christopher

actor supergood subramani died by cancer

புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நடிகர் சூப்பர் குட் சுப்ரமணி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். actor supergood subramani died by cancer

சிட்டிசன், ஏபிசிடி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய இயக்குநர் சரவண சுப்பையாவிடம் உதவி இயக்குநராக தனது திரை வாழ்வை தொடங்கியவர் சுப்ரமணி.

ADVERTISEMENT

அதன்பின்னர் சூப்பர் குட் நிறுவனத்தில் பணி புரிந்ததால் ’சூப்பர் குட் சுப்ரமணி’ என அழைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ’அழகர்சாமியின் குதிரை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பின்னர், பிசாசு, ரஜினி முருகன், காலா, இரும்புத்திரை, சீமராஜா, ஜெய்பீம், ரத்னம், மகாராஜா உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ADVERTISEMENT

சமீபத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட சூப்பர் குட் சுப்ரமணி கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சூப்பர் குட் சுப்ரமணி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்க துணைத் தலைவர் பூச்சி முருகன் மற்றும் கருணாஸ் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share