நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்து இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த மே 31ஆம் தேதி வெளியான கருடன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் நடிகர் சூரியுடன் இணைந்த நடிகர்கள் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நீண்ட நாள் கழித்து ஒரு நல்ல கதைக்களம் கொண்ட கிராமத்து ஆக்க்ஷன் படத்தை பார்த்த திருப்தி இருப்பதாக ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் கருத்து தெரிவித்தனர்.
கருடன் திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் 14.6 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன் பிறகு ஜூன் 3 தேதி திங்கட்கிழமை கருடன் திரைப்படம் 2.6 கோடி ரூபாயும், ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 2.2 கோடி ரூபாயும் வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் கருடன் திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் 19.40 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காமெடியனாக பல படங்களில் நடித்து வந்த சூரி விடுதலை படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது கருடன் படத்தில் ஒரு பக்கா கமர்ஷியல் ஹீரோவாக நடித்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கருடன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விடுதலை 2, கொட்டுக்காளி ஆகிய படங்களிலும் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: எந்த வயதிலிருந்து குழந்தைகளுக்கு உடற்பயிற்சிகள் அவசியம்?
ஹெல்த் டிப்ஸ்: பாக்கெட் உணவுகளைச் சாப்பிடுபவரா நீங்கள்?
2024 தேர்தல் முடிவு : பாஜக கூட்டணி 292, இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி!
டாப் 10 நியூஸ் : இந்தியா கூட்டணி கூட்டம் முதல் இந்தியா-அயர்லாந்து போட்டி வரை!