வெற்றிமாறன் கதையில் சூரி- சசிகுமார்

Published On:

| By Monisha

actor soori leading role

விடுதலை – பாகம் 2′ தொடர்ந்து கதையின் நாயகனாக சூரி நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா கும்பகோணத்தில் நடைபெற்றது.

‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். சூரியுடன், சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ADVERTISEMENT

இவர்களுக்கு ஜோடியாக நடிகைகள் ரேவதி சர்மா மற்றும் ஷிவதா நாயர் நடிக்கின்றனர். மேலும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

actor soori leading role

ADVERTISEMENT

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர் கே.குமார் தயாரிக்கிறார்.

ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் பெயரிடப்படாத இப்படத்தின் பணிகள் கும்பகோணத்தில் பூஜையுடன் தொடங்கின. சூரி நடிப்பில் அடுத்தாக ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை பாகம் 2’ திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இராமானுஜம்

விஜயலட்சுமி புகார்: சீமான் மீது மற்றொரு வழக்கு!

மதிப்பீட்டு உத்திகளில் எப்போது மாற்றம் வரப் போகிறது?-3

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share