“மாமன்” இனி படம் மட்டும் இல்லை… சூரி எமோஷனல் டாக்!

Published On:

| By Selvam

Actor Soori Emotional X Post

“மாமன்” இனி படம் மட்டும் இல்லை இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். Actor Soori Emotional X Post

பாண்டிராஜ் இயக்கத்தில் சூரி நடித்த மாமன் திரைப்படம் கடந்த மே 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படம் குறித்து நடிகர் சூரி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட எமோஷனல் பதிவில்,

“5000 KM மேலாக பயணம் செய்துள்ளேன். ஆனால் எண்ணமுடியாத இதயங்களுடன் தான் நான் இணைந்துள்ளேன். கடந்த 23 நாட்களில், 2,00,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பங்கள், சினிமா ரசிகர்கள், விமர்சகர்கள் “மாமன்” படத்தின் ஒரு பகுதியாக இணைந்தனர்.

அந்த சந்திப்புகள் என் நெஞ்சில் மறக்க முடியாத நினைவுகளாகி விட்டன. ஒவ்வொரு நாளும் மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் மனதில் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை உணர்வது என் உள்ளத்தை நெகிழச் செய்தது.

இந்த படம் எண்களை நோக்கி எடுக்கப்படவில்லை; பல உயிர்களைத் தொட்டு, வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தவே இப்பயணம் ஆரம்பமானது. இந்தப் படம் உங்கள் மனதில் இடம் பிடித்திருப்பதே எனக்குப் பெரிய வெற்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என் வாழ்க்கையை மாற்றிவிட்டன. Actor Soori Emotional X Post

ஒருநாளும் சோர்வாகவில்லை, ஏனெனில் உங்கள் பிரியம் எனக்கு எப்போதும் ஊக்கமாய் இருந்தது. மிகுந்த நன்றி. “மாமன்” இனி படம் மட்டும் இல்லை — இது நம் அனைவருடனும் பிணைந்த ஓர் உணர்வு. நான் என்றும் உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் கடமைப்பட்டவனாகவே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share