நடிகர் சிவராஜ்குமாருக்கு செயற்கை சிறுநீர்ப்பை … எதில் இருந்து தயாரிக்கப்பட்டது?

Published On:

| By Kumaresan M

பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் உள்ள மியாமி புற்றுநோய் மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

அறுவைசிகிச்சையை மேற்கொண்ட டாக்டர் முருகேசன் மனோகர், அறுவை சிகிச்சை மிகவும் சிறப்பாக நடந்ததாகவும், சிவராஜ்குமார் சீராக குணமடைந்து வருகிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீர்ப்பையை நாங்கள் முழுவதுமாக அகற்றி விட்டோம். குடலைப் பயன்படுத்தி ஒரு செயற்கை சிறுநீர்ப்பை செய்து அவருக்கு பொருத்தப்பட்டுள்ளது என்றும் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டில், மனிதர்களுக்கான செயற்கை சிறுநீர்ப்பை உருவாக்கும் முறை மருத்துவத்துறையில் நடைமுறையில் உள்ளது. இதை மருத்துவத்துறையில் ஆர்த்தோடோபிக் நியோபிளாடர் என்று குறிப்பிடுகிறார்கள்.

நோயாளியின் சிறுகுடலில் பொதுவாக 35 முதல் 40 அங்குலம் வரை வெட்டி எடுத்து புதிய சிறுநீர்ப்பையை செயற்கையாக உருவாக்கி பொருத்துகிறார்கள். இந்த முறையில்தான் சிவராஜ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

62 வயதான நடிகர் சிவராஜ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக சென்ற வாரம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது, அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை தேறியுள்ளது.

அவர் விரைவில் குணமடைந்து சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார் என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் முருகேசன் மனோகர் தெரிவித்து உள்ளார். சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.

சிவராஜ்குமாருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட டாக்டர் முருகேசன் மனோகரின் தந்தையும் இதே போன்று சிறுநீர்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். தந்தையின் ஆசையின் காரணமாக புற்று நோய் மருத்துவராகி தற்போது மியாமியில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

எம்.குமரேசன்

“அண்ணா… காலை பிடித்து கதறிய மாணவி”: அண்ணா பல்கலையில் நடந்தது என்ன?

அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை… எடப்பாடி கண்டனம்!

ராமதாஸின் வன்னியர் பாசம்… அன்புமணியை தலைவராக்கியது ஏன்? – சிவசங்கர் கேள்வி!

சுனாமியில் தப்பித்த ‘பேபி 81’: இப்போது வளர்ந்து விட்டதே!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share